Sep 25, 2015

விரைவில் தயார் 7th Pay Commission அறிக்கை

 மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. கடைசியாக, 2006ம் ஆண்டு, ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அரசு ஊழியர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் குறித்து ஆராய்ந்து, சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும் பரிந்துரையை தயார் செய்துள்ளனர். விரைவில் இந்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment