Sep 10, 2015

அரசு ஊழியர்களுக்கு பென்சன் கிடைக்குமா விஜயகாந்த் சந்தேகம்

மொத்தம் ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசு கடனில் சிக்கத்தவித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தேகம் எழுப்பி உள்ளார்.


 இது தொடர்பாக திங்கள்கிழமைஅவர் வெளியிட்ட அறிக்கை:
 கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக அரசு பதவி ஏற்றபோது, அரசுக்கு ரூ.1லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அது ரூ. 2.11லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசுப் போக்குவரத்துத்துறையிலும், மின் வாரியத்திலும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


 மொத்தமாக ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் தமிழக அரசுசிக்கித் தவிக்கிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.12 ஆயிரம்கோடி பணத்தை மத்திய அரசின் ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்றுபலர் சந்தேகப்படுகின்றனர். இதற்கு உரிய பதிலை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment