Sep 12, 2015

குரூப் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது

என்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 1,2,4, பி.எஸ்.ஆர்.பி மற்றும்  வி.ஏ.ஓ பணிதேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட ÷ வலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இது தொடர்பாக விடுத்துள்ள  அறிக்கை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  சார்பில் நடைபெறும்
குரூப் 1-க்கான தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி  நடைபெறுகிறது. இதற்கு பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப் பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி  முதல் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல்  மாலை 5 மணியும் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு சனிக்கிழமையும்  மாதிரித் தேர்வு நடைபெறுகிறது.


ஆகவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நகல், ÷ வலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் அல்லது  தபால் மூலமாக விண்ணப்பித்து, திருப்பூர் கலெக்டரேட் அலுவலக  வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும்  இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment