Sep 3, 2015

கூடுதல் மார்க் எடுக்க இலவச கையேடு, பிளஸ் மாணவர்களுக்கு அரசு வழங்குது.


 பிளஸ் 2 பாடத்தில், கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு இலவசமாக கையேடு வழங்குவதற்கு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் கலந்துகொண்ட சி.இ.ஓ., அய்யண்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கணிதம், ஆங்கிலம், வணிகவியல், கணக்கு பதிவியல், வரலாறு பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்கான கையேடு தற்போது அச்சாகி உள்ளது. பாடவாரியாக 5,000 கையேடுகள் வழங்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்துக்கான கையேடு,  ஒரு வாரத்தில் அச்சாகி விடும்.
கல்வியில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு மட்டும், இந்த கையேடு வழங்கப்படும்.

தமிழ் பாடத்துக்கு கையேடு இல்லை. அரசு மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவனங்களும், கையேட்டை ஸ்பான்சர் செய்துள்ளன. பாட வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு, மாதிரி கையேட்டை தயாரித்து, சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறைக்கு அனுப்பினோம். அவர்களது ஒப்புதல்படியே, கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் மாணவ, மாணவியருக்கு இவை வழங்கப்படும். 10ம் வகுப்பில் அனைத்து பாடத்துக்குமான கையேடு, பிரின்ட் ஆகி வருகிறது. 20 நாட்களில் அதுவும் வழங்கப்படும். மிட் டெர்ம் தேர்வின் போது, கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மட்டும் கையேடு வழங்கப்படும். பிளஸ் 2, 10ம் வகுப்பு, மாணவர்களை, இந்த கல்வி ஆண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.என்றார்

No comments:

Post a Comment