Sep 6, 2015

மருத்துவ கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தும் பணமின்றி தவிக்கும் கூலி தொழிலாளி மகள்


 ஏட்டுக்கல்வி ஏழைக்கு எட்டாது என்பது இவர்களின் வாழ்க்கையே உதாரணம்.    சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, சென்னகிரியைச் சேர்ந்த சித்தன் (45) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி( 42) இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் யசோதாவை சிறப்பான உயர்கல்வியை படிக்க வைக்க விரும்பினார். யசோதா, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,093 மதிப்பெண் பெற்றார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியாலஜி படிக்க விண்ணப்பித்தார்; அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது.


 கட்டண ரூபத்தில் தடை:
கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என்றதும் கூலி தொழிலாளி சித்தன் சற்றே ஆடிப்போய்விட்டார். எப்படியும் தன் மகளை படிக்க வைத்திட வேண்டும் என்று இரவு பகல் பாராமல் வேலை செய்தாலும் சித்தனால் அவ்வளவு பெரிய தொகையை சேமிக்க முடியவில்லை. இதனால் சித்தன் திணறி வருகிறார்.
அட்மிஷனுக்கு போக முடியல

இதுகுறித்து மாணவி யசோதா கூறுகையில் அரசு மருத்துவக் கல்லுõரியில், ’சீட்கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், முதல்கட்டமாக, விடுதி கட்டணம், சேர்க்கை கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இன்று, சேர்க்கைக்கு செல்ல வேண்டும். அப்போது தான், என்னுடைய கல்வியை தொடர முடியும். பணம் இல்லாததால், என்ன செய்வது என தெரியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

அறிவு உதவிக்காக காத்திருக்கிறது

தாராள உதவும் உள்ளம் கொண்டவர்கள், மாணவியின் தந்தை சித்தனை,
 91500 56302 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அம்மா என்று போற்றப்படும் தாய் உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் தாராள உள்ளம் கொண்டவர். அவரின் கருணை பார்வை மாணவி யசோதா மீது படும் என்பது ஊரார் மற்றும் உற்றார்களின் எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment