Sep 4, 2015

ஸ்கூல்ல பாலியல் பாடம் நடத்த அனுமதி மெட்ராஸ் யுனிவர்சிட்டி கேட்குது


நாட்டில் மாணவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவர் எஸ்.சுமதி, பெண்கள் கல்வி மைய துறை தலைவர் (பொறுப்பு) பாரதி ஹரிசங்கர், இந்திய பாலியல் நிபுணர்கள் சங்க தலைவர் டாக்டர் டி.காமராஜ் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் செப்டம்பர் 4ம் தேதி சர்வதேச பாலியல் சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தில் பாலியல் உரிமை மனித உரிமைஎன்ற தலைப்பில் கருத்தரங்கு காலை 10 மணிக்கு நடக்கிறது. துணைவேந்தர் பேராசிரியர் தாண்டவன் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.

அனைவரிடத்திலும் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கம். அதுதான் எங்கள் நோக்கம். காதல் எது, காமம் எது, வாழ்க்கை எது, வாழ்க்கையை எப்படி திட்டமிடவேண்டும். என்பனவற்றை அறியாதவர்களாக பலர் இருக்கிறார்கள். தேவையில்லாத கர்ப்பம், கருத்து முரண்பாடு, பாலியல் வன்முறை, விவாகரத்து, உடல்நலத்தை பாதுகாக்க தவறுதல், மன உளைச்சல், பாலியல் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் ஏராளமானவர்கள் உள்ளனர்.

குறிப்பாக

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்த பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும். எனவே, இதை வலியுறுத்தி 1 லட்சம் பேர்களிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அனுப்ப உள்ளோம். கையெழுத்து இயக்கத்தை இன்றே (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறோம்.



செல்போன், இணையதளம் ஆகியவை புதிய தொழில்நுட்பத்தில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றில் கிடைக்கும் பரவும் தீய பழக்கவழக்கத்தை மாணவர்கள் எடுத்துக்கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment