Sep 12, 2015

எப்போது வரை பெறலாம் கல்விக்கடன் வட்டி சலுகை

கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டி சலுகை அளிக்க அரசு முன்வந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளில் கல்விக்கடன் பெற்றவர்கள் அது தொடர்பாக வங்கிகளை  அணுகி விவரம் பெற்று வருகின்றனர். கல்வி  கடன் வட்டி சலுகை பெற  கடைசி நாள் எது என்ற குழப்பம் நீடித்து வரு கிறது. 


இந்நிலையில்  கல்வி கடன் வட்டி சலுகையை, 2014 - 15ல், கடன்  பெற்றவர்கள் செப்., 15ம் தேதிக்குள்ளும்; 2009 - 2014 வரை கடன்  பெற்றவர்கள், அக்., 10ம் தேதிக்குள்ளும் பெற வேண்டும்.இந்த இறுதி  வாய்ப்பை தவறவிட்டால், வட்டிச் சலுகையை பெற முடியாதுஎன, இந் திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ’2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரையில், கல்வி  கடன் பெற்றவர்களுக்கு, வட்டிச் சலுகை அளிக்க வேண்டும்என, இந்தி யன் வங்கிகள் சங்கத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ÷ கட்டுக் கொண்டது.இந்த கோரிக்கையை ஏற்று, வட்டிச் சலுகை அளிப் பதற்கான சுற்றறிக்கையை கடந்த மாதம், 26ம் தேதி, இந்திய வங்கிகள்  சங்கம் வங்கிகளுக்கு அனுப்பியது. கனரா வங்கிக்கு, வட்டிச் சலுகை  விவரங்களை, பிற வங்கிகள் அளிக்க வேண்டும்.
இவற்றைத் தொகுத்துமத்திய அரசுக்கு கனரா வங்கி அளிக்கும். இதன்பின், வங்கிகள் அளித்த  வட்டிச் சலுகையை, மத்திய அரசு, வங்கிகளுக்கு திருப்பி அளிக்கும்.  வட்டிச் சலுகையை தொகுத்து, கனரா வங்கிக்கு அளிக்க வேண்டிய இறுதி  நாளையும், வங்கிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்வி கடன்  பெற்றவர்களுக்கான, வட்டிச் சலுகை விவரங்களை, அக்., 10ம் ÷ ததிக்குள்ளும்; 2014 - 15ல் கடன் பெற்றவர்களுக்கான வட்டிச் சலுகை  விவரங்களை வரும், 15ம் தேதிக்குள்ளும், கனரா வங்கிக்கு வங்கிகள்  அளிக்க வேண்டும். மாணவர்கள் வட்டிச் சலுகை பெற, இது தான் கடைசி  நாள்.
கல்வி ஆலோசனை குழு அமைப்பாளர் சீனிவாசன் இதுகுறித்து கூறும்÷ பாதுகல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தங்களின் கணக்கு விவரங்கள்  கனரா வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை, வங்கி கிளைகளில்  மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். வட்டி சலுகை பெற, விண்ணப் பங்களையும் அளிக்கலாம். இதற்கான உரிமை, மாணவர்களுக்கு உண்டு.  தகவல் தெரிவிக்க மறுக்கும் வங்கி கிளைகள் குறித்து, சம்பந்தப்பட்ட வ ங்கித் தலைவர் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கு புகார் செய்யலாம்.

  மேலும் தொழில்கல்வி படிப்புகளுக்கு கல்வி கடன் பெற்றிருந்தால் மட்டு மே கல்வி கடன் வட்டிச் சலுகை பெற முடியும்.  இந்திய வங்கிகள் சங்க  கல்வி கடன் திட்டத்தின் கீழ், இந்தியாவில் படிக்க கடன் வாங்கியிருக்க ÷ வண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், 4.50 லட்சம் ரூபாய்க்குள் இ ருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment