Sep 4, 2015

ஆசிரியர் தகுதிதேர்வு எதிர்பார்ப்பும் நிலைப்பாடும் மேட்டர்தாங்க


 கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிநியமன ஆணை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.. 5 சதவீதம் கனவு... தற்போது அந்தப்பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.



ஆசிரியர்களும் எதிர்பார்ப்புகளும் ?

தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் சுமார் 6 ஆயிரம் 2ம் தாளிலும் சுமார் 14ஆயிரம் முதல் தாளிலும் உள்ளனர். தற்போது நடந்த முடிந்த பணிநிரவல்களின் படி 4 ஆயிரம் காலிப்பணியிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது.  இவற்றை நிரப்புமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் ஆசிரியர் பணிக்கு கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் முறையில் முற்றிலும் மாறுபட வேண்டும்.

முதல் தாள் ஆசிரியர்களுக்கு வேலை என்பது இயலாது. எனினும் அவர்களுக்கு நிரந்தரப்பணி கிடைக்கும் வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிததால் போதும் என பல ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரசும் நிலைப்பாடும்

தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. எனினும் 2 ஆண்டுகள் தகுதித்தேர்வு நடத்தாமல் இருப்பதால் இவர்கள் வரும் ஆண்டுகளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்பலாம். உச்சநீதிமன்றத்தில் வரும் தீர்ப்பை இவர்கள் அமுல்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.



Article by
P.Rajalingam Puliangudi..

No comments:

Post a Comment