Sep 9, 2015

சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதி தேர்வு இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான போட்டோ, கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது,

No comments:

Post a Comment