Sep 11, 2015

மாணவனை அடித்து நொறுக்கிய ஆசிரியர் சமூக வலை தளங்களில் பரவி வரும் வீடியோ

அகிம்சையையும், ஒழுக்கத்தையும் வேதம் கற்றுத்தருகிறது. அந்த வேதத்தை கற்றுத்தரும் பாடசாலையில் வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை அடித்து துன்புறுத்திய சம்பவம் வீடியோவாக பரவி வருகிறது. இதை பார்க்கும் நெஞ்சத்தை உலுக்கும் விதமாக அது உள்ளது.
 கர்நாடகாவில் மங்களுர் அருகே பான்ட்வாலா என்ற பகுதியில் வேத பாடசாலை உள்ளது. இங்கு வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வீடியோவாக வேகமாக பரவியுள்ளது.


   அந்த பள்ளியில் வேத பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் சோமசுந்தர சாஸ்திரி என்பவர், வலதுகையில் கட்டுடன் வந்த மாணவனை அடித்து துன்புறுத்துவது வீடியோவில் பதிவாகி உள்ளது.அந்த வீடியோவில், மாணவன் தனது வலது கையில் ஏற்கனவே காயம் காரணமாக கட்டு போட்டுள்ளான். அதனையும் பொருட்படுத்தாமல் அந்த மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி காதை திருகி, அவனது இடதுகையை முறித்து அவனை துன்புறுத்துகிறார்.

வலி தாங்காமல் அந்த மாணவன் அலறுகிறான். அந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆசிரியரின் இந்த கொடூர செயலை குழந்தைகள் உரிமை அமைப்பினர் போலீசிலும் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல இடங்களிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment