Sep 11, 2015

சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வில் குளறுபடி

மனுதாரர் மார்பை பதிவாளர் முன்பு அளக்கணும் : ஐகோர்ட்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மார்பு அளவு இருந்தும் இல்லை என்று தன்னை தகுதியிழக்க செய்துவிட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்டில் விளையாட்டு வீரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட் பதிவாளர் முன்பாக அவரது மார்பை அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


சென்னையில் உள்ள தி.நகரை சேர்ந்தவர் அருண். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கல்லூரியில் படிக்கும்போது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். இந்நிலையில், தமிழக காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்றேன்.

 இதன்பின்னர் நடந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட மார்பளவு எனக்கு இல்லை என்று கூறி என்னை அதிகாரிகள் தகுதியிழக்க செய்து விட்டனர். விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 சதவீத இடம் பூர்த்தியாகவில்லை என்றால், போலீஸ்காரர்களின் வாரிசுகளை கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். இதற்காக எனக்கு உடற்தகுதி தேர்வில் என்னை போலீஸ் அதிகாரிகள் தகுதியிழக்க செய்துள்ளனர்என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு : மனுதாரர் 10–ந் தேதி ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புப்பிரிவு பதிவாளர் முன்பு ஆஜராகவேண்டும். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள், பதிவாளர் முன்பு மனுதாரரின் மார்பு அளவை அளக்கவேண்டும். அதை வீடியோவில் பதியவேண்டும். பின்னர், அந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கின்றோம்என்று உத்தரவிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment