Sep 12, 2015

ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

நாட்டில் அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற  நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை கட்டாயமல்ல  என்று அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும்  மனுவுக்கு, தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற  மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.



இது தொடர்பாக சிவகாசியைச் சேர்ந்த வக்கீல் செபாஸ்டின்ராஜ் தாக்கல்  செய்த மனு: எந்த ஒரு அரசு சலுகையைப் பெறவும் ஆதார் எண்ணைத்  தாக்கல் செய்யுமாறு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம்  2013ல் உத்தரவிட்டது.

 இந்த உத்தரவை அரசாணை அல்லது சுற்றறிக்கை  மூலம் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு தெரிவித்து இருக்க ÷ வண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு  இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்தது.
 மனுவுக்கு தமிழக  தலைமைச் செயலர் 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  அரசின் பதில் மனுவை விசாரித்த பின்னர் இது குறித்த தீர்ப்பு வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment