Sep 3, 2015

எஸ்ஐ நேர்முக தேர்வு - இன்று தொடக்கம்

1,078 எஸ்ஐகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு இன்று காலை தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 45 நாட்கள் வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


தமிழதகத்தில் 984 எஸ்ஐ (சார்பு ஆய்வாளர்) காலி பணியிடங்கள் மேலும் பின்னடைவு காலிபணியிடங்கள் 94 என 1,078 எஸ்ஐ  பணியிடங்களை நிரப்புவதற்கான பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மே 23ம் தேதியும், மறுநாள் காவல்துறைக்கான 20 சதவீத ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வும் நடந்தது. தமிழகத்தில் 32 மாவட்ட  தலை நகரங்களில் 114 மையங்களில் நடந்த இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வாக உடல் தகுதி தேர்வு ஆகஸ்ட் முதல்  வாரத்தில் 11 இடங்களில் நடந்தது.

இதில், வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து வகை போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று காலை முதல் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இவைகள்  அனைத்தும் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஒரே தேர்வாக நடத்தப்படாமல் இந்த முறை தனித்தனியாக நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. யார் எந்த தேதியில் நேர்முக தேர்வுக்கு வர வேண்டும் என ஏற்கனவே போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை  10 மணிக்கு தொடங்கும் நேர்முக தேர்வு தினசரி வீதம் தொடர்ந்து ஒன்றரை மாதம் வரை நடக்க உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment