Sep 6, 2015

TET NEWS :விஸ்வரூபம் எடுக்கும் TET விவகாரம், தனிநபர் வழக்காக மாற்ற சூழ்ச்சியா?



2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தாள் 1ல் 14000 பட்டதாரி ஆசிரியர்களும் 10000க்கும் மேற்பட்டோர் இடைநிலை ஆசிரியர்களாக தேர்ச்சிப்பெற்றனர்.பின்பு வெய்ட்டேஜ் மற்றும் 5சதவீத பிரச்சனைகளால் வழக்கு உயர்நீதிமன்றத்திலிருந்து டெல்லி உச்சநீதிமன்றம் சென்றது.

வழக்கை திசை திருப்ப சூழ்ச்சியா?

தற்போது போடப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கானது 7வழக்கறிஞரிடம் 11கட்டுகளாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனுதாரராக உள்ளனர்.இவ்வழக்கானது பொதுநல வழக்கு என்ற நிலையிலும் இருந்தது... இந்நிலையில் 5சதவீத பிரச்சனை மற்றும் வெய்ட்டேஜ் பிரச்சனை நீதிக்கு ஆதரவாகவே உள்ளது.மேலும் சில அமைப்புகள் இவ்வழக்கில் உள்ள மெயின் பெட்டிசனர் சிலரை தொடர்புகொண்டு வழக்கை தனிநபர் வழக்காகவும் மாற்ற வேண்டப்பட்டதாகவும் வழக்கு பதிந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் அளிப்பதாக கூறி திசைதிருப்பி வருகின்றனர், எனவே இதனை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒருவேளை இச்சூழ்ச்சிகளை மேலும் மேற்கொண்டால் விரைவில் காவல்துறையின் அனுமதியோடு போராட்ட தேதி அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் திரட்டி வழக்கை சந்திப்போம்.

கட்டுரை எழுதியவர்

பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்

Information:
ஆர்.செல்லத்துரை மாநில தலைவர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்

4 comments:

  1. Yes sir sure ...
    Kanddipaga porattam nadakkum

    ReplyDelete
  2. Yes sir sure ...
    Kanddipaga porattam nadakkum

    ReplyDelete
  3. Enna panna mutiyum sir avankalukku atchi pitikka athavathu pannuvanka

    ReplyDelete
  4. Yes sir neethi jaikkanum....jaikum

    ReplyDelete