Oct 30, 2015

இரவு நேர இணையப் பயன்பாட்டில் 50 சதவீதம் காலையில் வைப்பு வைக்கப்படும்: ஏர்டெல் அறிவிப்பு



இணைய தள சேவைக்கான Data பயன்பாட்டில் இரண்டு முக்கிய சலுகைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும் Dataவில்50 சதவிகிதம் காலையில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது.


இது 2ஜி முதல் 4ஜி வரையான அனைத்து தளங்களிலும் பொருந்தும் என்றும் ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஒருவர் பெறும் Data இணைப்பில், அவரது குடும்பத்தினர் 4 பேர் வரை அதே Dataவைப் பகிர்ந்து பயன்படுத்தும் திட்டத்தையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதுபோன்ற வாடிக்கையாளர் சேவைகளில் முக்கியத்துவம் அளிப்பதால், ஸ்மார்ட்ஃபோன் நெட்வொர்க்கில் ஏர்டெல் முன்னிலை வகிப்பதாக அந்நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவுஇயக்குனர் ஸ்ரீனி கோபாலன் தெரிவித்தார்.





No comments:

Post a Comment