Oct 7, 2015

கின்னஸ் சாதனை V.I.T மாணவர்

 கோட்டா: பை எனப்படும், 70,000 கணித மதிப்பு எண்களை, நினைவுபடுத்திக் கூறிய, வேலுார், வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரின் பெயர், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



                   வட்டத்தின் சுற்றளவுக்கும், அதன் குறுக்களவுக்கும் இடையிலான விகிதம், கணிதவியலில், பை எனப்படும். இது, 3.14159 என்ற எண்ணால் தோராயமாக குறிக்கப்படுகிறது. இதை, 22/7 என்ற எண்ணாலும் குறிப்பிடலாம். ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, தமிழகத்தின் வேலுாரில் உள்ள வி.ஐ.டி., பல்கலையில் படிக்கிறார். இவர், 70,000 பை மதிப்பு எண்களை தொடர்ச்சியாகக் கூறி, உலக சாதனை படைத்தார். இச்சாதனை, ஒன்பது மணிநேரம், 27 நிமிடங்களில் படைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் நிகழ்த்தப்பட்ட இச்சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் நிறுவனம், 1ம் தேதி, சான்றிதழ் அளித்துள்ளது. இதற்கு முன், 2005ல், சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்பவர், 67,890, பை மதிப்பு எண்களை, 24 மணி நேரங்களில் நினைவுபடுத்திக் கூறி, உலக சாதனை படைத்தார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை, ராஜ்வீர் மீனா முறியடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment