Feb 18, 2016

பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில்  நியமனம் தொடர வேண்டும் என பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.இச்சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.


மாநில தலைவர் இரத்தினகுமார் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில பொருளர் அய்யாதுரை முன்னிலை வகித்தார். செந்தில்வேலன், ராஜசேகர், கிருஷ்ணன், ராபின்சன், செம்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.


இனிவரும் காலங்களில் ஆசிரியர் நியமனத்தில் தகுதி தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தொடரவேண்டும். எதிர் வரும் 22-ம் தேதி சென்னையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment