Mar 23, 2016

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் : தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.



மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த வைகோ, ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும், முடிவு செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment