Mar 23, 2016

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு:

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-2018-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அரசு ஒதுக்கீட்டு

இடங்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்றது.



முதுநிலை படிப்புகளுக்கு 1,163 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு 40 இடங்கள் என மொத்தம் 1,203 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தேர்வெழுதிய மாணவர்களில் 7,580 பேர்களுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி, ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிறபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment