Apr 2, 2016

17,000 டன் பாலத்தை சுழற்றி அசத்தல்

இரயில்வே டிராக்குகளின் மீது சாலை போக்குவரத்திற்கான பாலம் அமைப்பது இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்குமே சவாலானது.


தொடர்ச்சியான ரயில் போக்கு வரத்திற்கு நடுவே உறுதியான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மிகக் கடினம்.

இதன் காரணமாகவே இன்னும் கூட இந்திய ரயில் டிராக்குகளின் குறுக்கே லெவல் கிராஸிங் பாலங்களும், மேம்பாலங்களும் கட்டப்படாமலே இழுபறியாக நீடிக்கிறது.

சீனாவில் ஒரு பிஸியான நகர்ப் பகுதி வுகான் சிட்டி (Wuhan City).  இங்கு 11 ரயில் பாதைகள் கொண்ட இடத்திற்கு மேல் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

1.428 மைல் நீளத்திற்கு அமைய உள்ள ரயில் பாலத்தில் ஏறத்தாழ 256மீ வரை இரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட வேண்டியதாக இருந்தது.

பாலத்தில் ஏற்ற இறக்க பாதைகள் கட்டப்பட்டு, மத்திய சமதளப் பகுதி ( 256மீ ) இடைவெளி அமைக்க தீவிரமாக முயற்சி செய்யப்பட்டது.

பாலம் கட்டும் நிறுவனத்துக்கு தேவைப்பட்டது 28 நாட்கள்.  இரயில்வே துறை யிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிறுவனம் கடைசியில் 256மீ நீளமுடைய பாலத்தை ஒரே முனையில் பக்கவாக்கில்
( Sideway) ) கட்டி முடித்தது.

இப்பொழுது இந்த பாகத்தை மெதுவாக குறுக்கு வாக்கில் திருப்பினால் பாலத்தின் கட்டுமானப் பணி ஓவர்.

ஆனால், இது சாதரண காரியமல்ல.

17,000 டன்கள் எடை உடைய 256மீ நீள கான்கிரீட் இணைப்பு பாலத்தை 106 டிகிரி கோணத்தில் குறுக்காக திருப்பி பாலத்தின் இன்னொரு முனையுடன் இணைக்க வேண்டுமென்றால் எத்தனை சிரமமான காரியம்? அதுவும் ரயில்வே அனுமதித்த 90 நிமிடங்களுக்குள்?

ஆனால், நமக்கு தான் மலைப்பு.

சீனர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. திட்டமிட்டது போலவே சாதித்து விட்டார்கள், 210 பொறியாளர்களின் மேற்பார்வையில் நடந்து முடிந்தது இந்த கட்டுமானப் பொறியியல் அதிசயம்.


(பாலத்தை திருப்புவதற்காக பாலத்தின் கீழே 60 அடி விட்டம் உடைய பேரிங்க்கை பொருத்துவதற்கு மட்டும் 15 நாட்கள் ஆனதாம்).

No comments:

Post a Comment