May 10, 2016

164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சிஅமைக்கிறது: புதிய தலைமுறை

நடைபெறவிருக்கும் தேர்தலில்  38.58 சதவீதம் வாக்குகளை பெற்று அதிமுக  164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கிறது என புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நியூஸ் 7 தொலைக்காட்சியும் தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றொரு தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவியும் தொகுதிவாரியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.


இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்புகளை இன்று வெளியிட்டது. இதில் 38.58 சதவீதம் வாக்குகளைப் பெறும் ஆளும் அதிமுக 164 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குக்கு 66 இடங்களும், பிற கட்சிகளுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. பத்திரிக்கைகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுபவை.ஒருசில நாளிதழ்களைத்தவிர.மேலும் மக்கள் சர்வே எடுப்பவரிடம் உண்மையைக் கூறுவார் என்று எதிபார்க்க முடியாது. இதே புதிய தலைமுறை தேர்தலுக்குப் பிந்தய கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

    ReplyDelete
  2. பத்திரிக்கைகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுபவை.ஒருசில நாளிதழ்களைத்தவிர.மேலும் மக்கள் சர்வே எடுப்பவரிடம் உண்மையைக் கூறுவார் என்று எதிபார்க்க முடியாது. இதே புதிய தலைமுறை தேர்தலுக்குப் பிந்தய கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

    ReplyDelete