May 11, 2016

குழந்தையின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்.

1 . எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்.


2 . புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை.

3 . முழு கவனம்  மிக அவசியம்.

4 . Mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று கொடுங்கள் உதரணம்  News - North ,East,West,South

5 . படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்.

7 . நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை.

8 .இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும்.

9 . தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும்.


10 . மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த எளுதில்  செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.

No comments:

Post a Comment