Jun 11, 2016

வாசி - அதை - நீ நேசி

சென்னை புத்தகக் கண்காட்சி 01-06-2016 முதல் 13-06-2016 வரை... இடம்:தீவுத் திடல்,சென்னை.


*சன்னல்கள் இல்லாத வீடும்
புத்தகங்கள் இல்லாத வீடும் பாழ்.

*எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று
லண்டன் தோழர்கள் கேட்டதற்கு
எது நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டார்
டாக்டர்.அம்பேதகார்.

*தான் துக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம்
 முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்.

*மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்கும்
இடம் புத்தகம் தாமஸ் கார்னைல்.

*ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது
வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு
புத்தகம் வாங்குவாராம்-நடிகர் சார்லின் சாப்ளின்.

*எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ
அங்கே நல்ல மனிதர்களும் எரிக்கபடுவார்கள்
சொன்னது சேகுவாரா.

*ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகை நோக்கிய
ஒரு சன்னலைத்திறக்கிறோம் தோழர் சிங்காரவேலர்.

*வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும்
சோர்வில் கண் அயர புத்தக வாசிப்பை நாடும்
மனிதனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது
ஜி.கே.செஸ்டர்டன்.

*புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை அவற்றின்
மேல் கவனம். இது உங்கள் வாழ்வையே
மாற்றிடக்கூறும்-என்று எச்சரிக்கை பொறிப்பது
நல்லது எலன் எக்ஸ்லே.

*உங்களது தலை சிறந்த புத்தகங்களை திருடிச்
செல்பவர்கள் உங்களது தலை சிறந்த நண்பர்களாகவே
இருக்கமுடியும் வால்டேர்.

*வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வாசிக்கவிரும்புவதற்காக
கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே மார்க் ட்வெய்ன்.

*ஒரு புத்தகத்தை இறவல் தருபவன் முட்டாள்
அதைத் திருப்பி தருபவன் அதைவிட பெரிய முட்டாள்
அரேபிய பழமொழி.

*உலகிலுள்ள அனைத்துவகை துயரங்களின் விடுதலை
ஒரு புத்தகத்தில் உள்ளது.-கூகிவா திவாங்கோ.

*ஒரு நல்ல வாசகங்கொண்டே ஒரு நல்ல புத்தகம்
அடையாளம் கானப்படுகிறது ஜார்ஜ் பெர்னாட்ஷா.
*யுத்தத்தில் கலந்துகொள்வதை விட கூடுதல் தைரியம்
ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.
- எல்பர்ட் கிரிக்ஸ்.

*புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும்
கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்கமுடியாது.
- மாவீரன் பகத்சிங்.

*ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை
விட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே
இருக்கிறது பிரடெரிக் எங்கெல்ஸ்.

*காலக் கடலில் நமக்கு வழிகாட்ட அமைக்கப்பட்ட
கலங்கரை விளக்கு புத்தகம் எட்வின் பி.விப்பின்.

*ஒரு நாட்டின் வருங்கால சந்ததியினர் தேடித்தேடி
அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள்
புத்தகங்களே ஹென்றி தொறா.

*நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத
உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு
மந்திரக் கம்பளம், புத்தகமே கரோலின் கோர்டான்.
*மார்டின் லுதர்கிங், ஒரு குழந்தைக்கு நீங்கள்,
வாங்கித் தரும் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்
என்றார்

*ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்
என்று வின்ஸ்டன் சர்ச்சில் கேட்டபோது, ஒரு
நூலகம் கட்டுவேன் என்றாராம் காந்தியடிகள்.

*தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்துவிட்டு வருவேன் என்றாராம் நேரு.

*என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்
இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று
என்றாரா,- பெர்ட்ரனட் ரசல்.

*கரண்டியை பிடுங்கிவிட்டு பெண்ணிடம் புத்தகம்

கொடுத்தால் போதும் என்றாராம் பெரியார்.

No comments:

Post a Comment