Jun 23, 2016

அரசு ஊழியர்களுக்கு பிச்சை போடும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்... கொடுப்பதை வாங்கிக்கொள்ள நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை..

எங்களின் உரிமையை கேட்கின்றோம்..
 கட்டணமில்லா சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டிய காப்பீட்டு நிறுவனம் , அரசு ஊழியர்களை கட்டம் கட்டி
கொள்ளையடிக்கும் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது..

01.07.12 முதல் 30.06.16 வரை அரசு ஊழியர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 243 அரசாணையில் உள்ள குறிப்பிட்ட சிகிச்சைக்கு, குறிப்பிட்ட மருத்துவமனையில் 4 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ளலாம்..

4 லட்சத்திற்கு மேல் ஆகும் செலவினை மட்டுமே அரசு ஊழியர் தன் கையிலிருந்து செலுத்த வேண்டும்..

தற்பொழுது (GO.no.169. Date 09.06.16) இந்த தொகை 01.07.16 முதல் 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது..

ஆனால் காப்பீட்டு நிறுவனமோ, நோயாளிகளின் சூழ்நிலையையும், மனநிலையையும் பயன்படுத்தி காப்பீட்டுத்தொகையில் 50% முதல் 70% தொகையினை கொள்ளையடித்து வருகிறது..

அதுவும் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும் அவல நிலை உள்ளது.

எவ்வளவு போராடினாலும் 100% காப்பீட்டுத் தொகையினை இதுவரை யாராலும் பெற இயலவில்லை...

ஆனால் நாம் அளித்த புகாரினைத் தொடர்ந்து தினமலர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த MD India காப்பீட்டு நிறுவனத்தின் மேளாலர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களோ அரசு ஊழியர்களுக்கு  காப்பீட்டுத் தொகையானது முழுமையாக வழங்கப்படுகிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில்  மறைத்துவிட்டார்..

எரிகின்ற வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்ற நோக்கில் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது..

எனவே உடனடியாக இயக்கங்கள் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு அரசு ஊழியர்களுக்கான 100% கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டுமாய் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்..

-தோழமையுடன்
தேவராஜன்,

தஞ்சாவூர்.

No comments:

Post a Comment