Jun 21, 2016

மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு.

மாணவர்களுக்கு சிறப்பு அலைபேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''பிஎஸ்என்எல் அலைபேசி சேவையை
பயன்படுத்தும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.118-க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி இணையா வசதியை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக ரூ.10-க்கு அழைப்புகளை பேசிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும். இந்த சலுகை ஜுன் 20 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள www.bsnl.co.in இணையதளத்துக்கு செல்லவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment