Jun 22, 2016

TET ARTICLE :"கண்டு கொள்ளவும், கண்ணீர் துடைக்கவும் ஆளில்லாமல் தவிக்கும் காணல் நீர்ஆசிரியர்கள்!"

இன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த ஐந்துஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன் பணியாற்றும்பட்டதாரிஆசிரியர்களின் வேண்டுகோள்கள்  பல்வேறு
ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையிலும்இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி சாய்க்க யாரும் முன்வராததால்மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலம்.


  கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் 23/08/2010 க்குப் பிறகு அரசுவிதிகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டியது கட்டாயம்.ஆனால் இந்த நடைமுறை தமிழகத்தில் முன் தேதியிட்ட அரசாணையாக 15/11/2011 ல்வெளிவந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழக பள்ளிகளில் இது சம்மந்தமான ஆணைகளைமுறையாக பெறப்படாமையாலும் காலம் தாழ்த்தி நடைமுறைப் படுத்தியமையாலும் ஏற்பட்டசிக்கலில் தற்போது சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் மூவாயிரத்திற்கும் மேல்...பதிவு முப்பு அடிப்படையில் தமிழக அரசின்  ஒரே அரசாணையின் கீழ் 2010& 2011 ஆம்ஆண்டுகளில் நடைபெற்ற பலகட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புகளில் கலந்தவர்களில் ஒருசாரருக்கு மட்டும்  TET லிருந்து விலக்கு அளித்ததில் உள்ள முரண்பாடுகள்இன்றுவரை தீர்க்கப்படவில்லை.புதிய ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புதல் தொடர்பாகஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் செயலர்களின்தார்மீக உரிமைகளை முன் அறிவிப்பு மற்றும் அரசாணை ஏதும் இன்றி நீக்கியமுரண்பாடுகள் இன்றுவரை களையப்படவில்லை.இவைகள் காரணமாக பணியில் சேர்ந்த பின்னர் பல பிரட்சனைகளைச் சந்திப்பது இந்தமூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.

இதில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளைக்காரணம் காட்டி இன்று வரை ஊதியம், வளரூதியம், ஊக்க ஊதியம், விடுப்பு பலன்கள்,பணிப்பதிவேடு போன்ற பலவற்றிலும் பலன் இன்றி பிரட்சனைகள் தீராமல் தொடர்கிறன.கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த ஆசிரியர்களின் நிலை மாற அறவழியில் பல்வேறு விதமாகதமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் முயற்சிகளைச் செய்தும் இதுவரைமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்தில் சென்றதா இல்லையா என்றவினாவிற்கு பதில் கிடைக்காமல் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் தவித்துவருகின்றனர்.இது சம்மந்தமான உதவிகளை பல முறை ஆசிரியர் சங்கங்களிடம் கேட்டும் இதுவரை யாரும்செவிசாய்க்க முன் வரவில்லை.போராடிப் பெறக்கூட மனமும்  சக்தியும் இல்லாத நிலையில் கானல் நீராய் காத்துஉள்ளனர்.அரசு விதிகளின்படி ஆசிரியர் பணியில் இவ்வளவு வருடங்கள் சிறப்பாக பணியாற்றிதகுதியை மேம்படுத்தியுள்ள இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களுக்கு தீர்வு TETலிருந்து இந்த மூவாயிரம் நிபந்தனை ஆசிரியர்களுக்கும்  முழுமையான விலக்குஎன்பது மட்டுமே.

கல்வி சார்ந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கல்வித் துறை அரசுஅலுவலர்கள், தமிழக பல்வேறு ஆசிரியர் சங்க முதன்மைப் பிரதிநிதிகள் போன்றஅனைவருக்கும் தாழ்மையுடன் முன் வைப்பது யாதெனில் இந்த  TET நிபந்தனைஆசிரியர்களின் பிரட்சனைகளை முறையாக தமிழக அரசின் கவனத்தில் எடுத்து சென்றுநல்ல தீர்வு காண உதவ வேண்டும் என்பது மட்டுமே.இதுவரை எப்படியோ...

ஆனால் இனி இந்த  TET நிபந்தனை ஆசிரியர்களின் ஆசிரியப்பயணம் வரும் 15/11/2016 உடன் முடியும் நிலையில் இறுதி நாளை நோக்கி பயணிக்கும்நிலையில் உள்ளனர்.இந்த நிபந்தனை ஆசிரியர்களைகண்டு கொள்ளவும்கண்ணீ்ர் துடைக்கவும் இதுவரை யாருமே இல்லாத சூழலில் இனியாவது நல்ல விடியல்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.


ஆக்கம் :ஆ. சந்துரு (கோவை)

2 comments:

  1. Tangedcodirectrequirement answer key எப்போது?

    ReplyDelete
  2. Engalai kapatha earum ellaya

    ReplyDelete