Apr 3, 2017

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting

நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)
  
காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்
நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.

புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் முழுநேரமும் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருக்கக்கூடாது.

காலனி, புத்தக பை,கலர்பென்சில், கிரையான்வரைபடபெட்டி முதலியவை தர நிர்ணயம் செய்த பின் வழங்கவேண்டும்.

பாடநூல் கழக செயலர் திரு கார்மேகம் அவர்களும் கலந்துகொண்டு பல விபரங்கள் கூறியுள்ளார்.



அடுத்த ஆண்டுக்கான புத்தகம் மே 15 குள் வந்துவிடும் எனவும் உபரிஅதிகம் இருக்கக்கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

No comments:

Post a Comment