Apr 21, 2017

டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்| padasalai news

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக,

ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 பேர், 2016 ஜன., 31ல் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், '11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. எனவே, அவர்களது நியமனம் செல்லாது' என, ௨௦௧௬ டிசம்பரில் அறிவித்தனர். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவிக்கு, புதிதாக, 11 பேரை நியமிக்க வேண்டும். 'ஏற்கனவே பதவி வகித்தோரில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தவிர, மற்றவர்கள் இப்பதவிகளுக்கு மனு செய்யலாம்' என, உத்தரவிட்டனர்.

நியமனம் : இந்நிலையில், ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம்; பொறியியல் பட்டதாரி கிருஷ்ணகுமார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முன்னாள் தலைமை பொறியாளர், சுப்பிரமணியன்; வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலுசாமி ஆகிய ஐந்து பேர், மீண்டும், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கவர்னர் அறிவுரைப்படி, இதற்கான உத்தரவை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார். புதிய உறுப்பினர்கள், ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது வரை, இப்பதவியில் நீடிப்பர்.

No comments:

Post a Comment