Apr 5, 2017

'லேட்' ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குனர்

சில நாட்களுக்கு முன், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய, தொடக்கக்
கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:

ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், காலையில் ஏதேனும் ஒரு பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்;பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர் மீது, '17 ' சட்டத்தின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை நேர பிரார்த்தனை கூட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பங்கேற்றால் மட்டுமே, தாமதமாக வரும் ஆசிரியர்களை அடையாளம் காண முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment