Apr 26, 2017

ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, தமிழக உணவு துறை வழங்கியுள்ளது| padasalai news

💳 தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன.
 🔸 தற்போதய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

 🔹 அதில், 1.31 கோடி கார்டுதாரர்கள், அனைவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர்.

🔸 56 லட்சம் பேர், பாதி பேரின் ஆதார் விபரங்களை பதிந்துள்ளனர்.

🔹 எஞ்சிய, 2.21 லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்யாததால், அவற்றை, உணவு துறை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.

💳 அவர்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை.

💳 இந்நிலையில், முடக்கிய கார்டுகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

👉 இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

🔹 ஒரு ஆதார் விபரம் கூட பதியாத ரேஷன் கார்டுதாரர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது, 'மொபைல் ஆப்' பகுதிக்கு செல்ல வேண்டும்; அதில், ஸ்மார்ட் அட்டை விண்ணப்பம் என்ற பகுதியில், 'க்ளிக்' செய்தால், புதிய அட்டை விண்ணப்பம், பழைய குடும்ப அட்டை பதிவு என இருக்கும்.

🔸 அதில், பழைய அட்டை பதிவு பிரிவுக்கு சென்று, தங்களின் காகித ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

🔹 காகித ரேஷன் கார்டின் நகல், குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.


🔸அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிய பின், இறுதியாக, முடக்கப்பட்ட கார்டுதாரருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment