May 2, 2017

TET Special - அடுத்தது என்ன?

💐 அடுத்தது என்ன?💐
_ பிரதீப் ப.ஆ.
 🔶🔷2 மாதம் போராடி முயன்றாச்சு.  TET தேர்வும் முடிச்சாச்சு.

 🔶அடுத்து இத்தேர்வை நினைத்து விமர்சித்து நின்று விடலாமா?

🔷இல்லை. இப்போது படித்ததை பயன்படுத்தி மேம்படுத்தி அடுத்த தேர்விற்கு தயாராதலே அறிவுடைமை.

🔷கோடி பல செலவு செய்து மருத்துவர், பொருயியல் படிப்பதை விட சிறந்தது ஒரு பட்டம் முடித்து தொடர்ந்து ஓரிரு வருடம் படித்து போட்டி தேர்வின் வழி அரசு பணியை பெறுவது.

🔶வெற்றி பெறுபவன் என்ன செய்கிறான் ?

🔷போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர் பலர் பதில்

🔶அவன் ஒரு தேர்வில் தோல்வியை தோல்வியால் பார்க்காமல் அடுத்த தேர்வின் அனுபவமாய் பார்க்கிறான்

🔶வாய்ப்புகளை பார்க்காமல் வாய்ப்புகளை உருவாக்குகிறான்

🔷நோடிபிகேடின் வரும் வரை காத்திராமல் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்கிறான்

🔷அவனது இலக்கு 1 வெற்றி. இடையில் வரும் பல தோல்வியை அவன் பொருட்டாக நினைப்பதில்லை

🔶எதிரே நிற்பது ?

💐TNPSC Group 2 A : டெட் தேர்வர்கள் தாங்கள் படித்த பாடத்தில் கூடுதலாய் படிப்பதன் இத்தேர்வை சிறந்த வாய்ப்பாய் மாற்றலாம்.
எதிர்வரும் பல போட்டி தேர்விற்கும் இவை தொடர் முதலீடாய் அமையும்


💐PGTRB & poly. PGTRB : இது தனிப்பட்ட பாட திட்டம். உங்கள் முதன்மை பாடத்தில் சிறந்த அறிவுடையவராயின் இதில் களம் காணுங்கள்.


💐இரண்டில் எது என முடிவெடுப்பது உங்கள் கரங்களில் ...


💐வரும் வாய்ப்பு வெற்றி வாய்ப்பாக மாற்றுவோம் - வாழ்த்துகளுடன் தேன்கூடு

No comments:

Post a Comment