Jun 18, 2017

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் தேர்வில்

 முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.

 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் த் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு கண்டிக்தக்கது.இந்த அறிவிப்பால் கிராம புற, ஏழை எளிய , தமிழ் வழியில் படித்தவர்கள் , இதர பின் வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பணி நியமனம் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு மட்டும் கிட்டும்.. அப்படி இருக்கையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு எழுத தகுதியானவர்கள் எனில்.. இரண்டாம் , மூன்றாம் தரநிலை பெற்றவர்கள் முட்டாள்களா? ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே கணினி ஆசிரியர்களின் வயிற்றில் அடித்தது. இப்போது என்ஜினியரிங், ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை  அழிக்க நினைக்கிறது.. முதல் வகுப்பு விண்ணப்பதாரர்கள்  என்றால் அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலே தேர்ந்தெடுத்து நியமனம் செய்யலாமே? டி.என்.பி.எஸ்.சி , யூ.பி.எஸ்.சி நடத்தும் ஆட்சியர்கள் தேர்வுகளில் கூட இந்த கொடுமை கிடையாது.


ஏற்கனவே 2013 ல் நடந்த TET தேர்வில் பல குழப்பங்களை உண்டாக்கி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 90,000 தேர்வர்கள் எல்லாம் பணிக் கிடைக்காமல் இருக்கும் நிலையில் இது போன்ற தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாலாக்கும் அறிவிப்புகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

 1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!

  சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!

  நம் பணியினை உறுதி செய்வோம்.

  ஒன்று சேருவோம்!
  வென்றே தீருவோம்!

  இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
  போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!


  நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
  தல்லாகுளம், மதுரை.

  2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு முதல் கட்டமாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நம்முடைய தகுதிச் சான்றிதழ்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை அவசரம் கருதி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசை எதிர்த்து இந்த போராட்டத்தை தமிழகத்தில் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் நடத்தினால் அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டுள்ளோம். நான்காண்டு காலம் நாம் படும் துயரத்தை இந்த அரசிற்கு எவ்வளவோ முறை எடுத்து கூறியும் இவர்கள் அதாவது இந்த அரசு நம்மை நாயை விட கேவலமாக கையாண்டதை மனதில் வைத்து சிரமம் பார்க்காமல் அனைத்து நண்பர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போராட்டம் அவசரம் கருதியே விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் 2017 தகுதிதேர்வு முடிவு வெளிவந்துவிட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் சின்னாபின்னமாகிவிடும். காலம் கருதி இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்.அமைச்சர் நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதில் ஒன்று கூட நமக்கானதாக இல்லை.அரசும்,ஆசிரியர் தேர்வுவாராயமும் வெளிப்படை தன்மை யின்றி செயல்படுவதை மக்களுக்கு உணர்தவே ஆசிரியர்களாகிய நாம் வெகுண்டெழுந்து நம்முடைய மனக்கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்த அரசையும் அமைச்சரையும் கண்டிக்கும் விதமாக இந்த போராட்ட களத்தில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும்.முதுகலை தேர்வு வருகிறது படிக்க வேண்டும்,குழந்தை குட்டிகளை பார்க்க வேண்டும்,கோவிலுக்கு போக வேண்டும் , பள்ளியில் லீவ் தரமாட்டார்கள் , இது போன்ற சாக்கு போக்கை கூறாமல் ஒரு நாள் மட்டும் தயவு செய்து அனைவரும் வாருங்கள்.நம்முடைய கோரிக்கையை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

  போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

  1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482

  ( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

  ReplyDelete
 2. Enlighten polytechnic college TRB English study materials all units with model questions bank available contact: 9688539099.Enlighten PG TRB English coaching center Idappadi Salem DT

  ReplyDelete